இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்பின் தேவையை பற்றி சொல்ல தேவையில்லை. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு அதன் பயன்பாடு பயனர்களை எளிதில் கவரும் வகையில் உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது அவ்வபோது பயனார்களை ஈர்க்கும் வகையில் புதிய புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை பயனார்களுக்காக வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வீடியோக்களை பகிரந்தால் அந்த வீடியோ குவாலிட்டி குறைந்து காணப்பட்டு இருந்தது. ஆனால், தற்பொழுது வெளியான புதிய அப்டேட்டில் HD வீடியோக்களை அனுப்பி கொள்ளலாம். இதனை யூஸர்கள் தாங்கள் அனுப்ப நினைக்கும் வீடியோவின் குவாலிட்டியை தாங்களே தேர்வு செய்ய வேண்டும்.
Also Read : இந்திய வரலாற்றின் பாரம்பரிய கார்கள் கண்காட்சி..! கண்டு ரசித்த மக்கள்…!
- முதலில் வாட்ஸ் அப்பை ஓபன் செய்ய வேண்டும். அதன்பிறகு யாருக்கு வீடியோ அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த Chat ற்கு செல்லவும்.
- பின், பேப்பர் கிளிப் (Paperclip Icons) ஐகானை கிளிக் செய்து, கேலரியை தேர்வு செய்யவும். இப்பொழுது நீங்கள் அனுப்ப நினைக்கும் வீடியோவை செலக்ட் செய்யவும்.
- ஸ்கிரீனின் மேற்புறத்தில் காணப்படும் HD ஐகானை கிளிக் செய்யவும். இதில் HD குவாலிட்டியை தேர்வு செய்தப்பின் வீடியோக்களை அனுப்ப வேண்டும்.