அய்யய்யோ..! திடீரென்று 100 அடிக்கு உள்வாங்கிய கடல்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Oh my gosh 100 feet of sea suddenly absorbed The next shocking incident

திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடாக உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே கடல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த கடலில் வந்து நீராடி செல்வது வழக்கம்.

இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருச்செந்தூர் கோவிலுக்கு அருகே இருக்கும் இந்த கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அவ்வபோது கடல் உள்வாங்குவது வழக்கமாக நடந்து வருகிறது.

100 அடிக்கு

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி பவுர்ணமி என்பதால் நேற்று காலையில் இந்த கோவிலுக்கு அருகே உள்ள கடலானது சுமார் 100 அடிக்கு உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதால் அதில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனை பார்க்க்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN