கூந்தல் பிரச்சனைகள் என வரும் போது பலருக்கும் கவலையை ஏற்படுத்தும் பிரச்சனை தான் பொடுகு தொல்லை. பொடுகினால் பாதிக்கப்பட்டவர் அதிகம் என்று சொல்லும் அளவிற்கு அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை பொடுகு தொல்லை. பொடுகு என்பது தலையில் தோன்றும் பூஞ்சை தொற்றாகும். மேலும் பொடுகு என்பது அனைத்து வயதினரையும் தாக்க கூடிய ஒரு தொற்று பூஞ்சையாகும். பொடுகு முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். மேலும் பொடுகு போக வேண்டுமென்றால் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறுவர் இன்னும் ஒரு சிலர் எண்ணெய் வைத்தால்தான் அதிகம் பொடுகு வரும் என்று கூறுகின்றனர் இதில் எது உண்மை என்ற கேள்வி நம் அனைவருக்கும் இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொடுகுக்கு எண்ணெய் வைப்பது ஒரு தீர்வாக இருக்க முடியுமா என்பது பலரின் புதிராகவே உள்ளது. அந்த காலத்தில் தலைக்கு எண்ணெய் தடவினால் நல்லது என்பார்கள். ஆனால் உண்மையாலும் எண்ணெய் தேய்த்தால் பொடுகு குறையுமா அல்லது அதற்கு எவ்வித எண்ணெய் தடவ வேண்டும் என்பது பற்றி ஜீனோயிஸ்க் கிளினிக்கின் காஸ்மட்டாலஜிஸ்ட் என்பவர் பொடுகினை பற்றி சில குறிப்புகளை கூறியுள்ளார்.
சிலர் தலைக்கு எண்ணெய் தடவுவது பழக்கமாக வைத்து இருப்பார்கள். தலையில் எண்ணெய் அதிக நேரம் இருக்கும்போது இறந்த சரும செல்கள் தலையில் அதிகம் படியும். இவை அதிகரிக்கும் போது பொடுகு உருவாகிறது. எண்ணெய் நிறைந்த தலையில் பாக்டீரியா இனபெருக்கம் செய்ய தொடங்கிவிடும். எண்ணெய் தடவும் போது பொடுகு தலையில் அப்படியே படிந்து கொள்ளும் இதனால் பொடுகு அதிகரிக்கும் எனப் பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். வேறு சிலர் எண்ணெய் தடவமால் விடும்போது அது அரிப்பை ஏற்படுத்தி பொடுகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பார்கள்.
எண்ணெய் தடவும் போது அது தலையில் உள்ள இறந்த செல், அழுக்கு ஆகியவற்றுடன் சேர்ந்து பொடுகு ஏற்படும். பொடுகு தலையில் இருக்கும் போது எண்ணெய் வைக்கலாமா வேண்டாமா என்ற இரண்டு நிலை கருத்துகள் இருக்கிறது.
உண்மையிலே எண்ணெய் தேய்ப்பதால் பொடுகு அதிகரிக்குமா என்று கேட்டால் அது இல்லை என்று தான் சொல்லவேண்டும். எண்ணெய் தடவுவது ஆரோக்கியம் என்றாலும் ஆனால் தினம்தோறும் எண்ணெய் தடவ வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. ஆனால் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தடவும் போது மண்டை வறண்டு போகாமல் இருக்கும். இரத்த ஓட்டம் அதிகரித்து பொடுகு குறையவும் வாய்ப்பு உள்ளது. இந்த பொடுகு தொல்லைக்கு எல்லா எண்ணெயும் தீர்வு தராது. பொடுகு தொல்லை போவதற்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினால் குறையும் என அறிந்து அதற்கு ஏற்ப எண்ணெயை தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்.
பொடுகு வருவதற்கான காரணம்:
தலைமுடி வறட்சி நிலை, கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்துதல், இரசாயனங்கள் கலந்த ஷாம்புகள், தலைமுடியை சரியாக கவனிக்காமல் இருப்பது, நீர் சத்து குறைபாடு, மேலும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பொடுகு வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொடுகு மண்டையில் முதலில் அரிப்பு நிலையில் தொடங்கி பின் வெள்ளை நிற துகள் போன்று தோன்றும். வறண்ட சருமம் மற்றும் முடிக்கு பயன்படுத்தும் தயாரிப்புகள் உள்பட பல காரணங்கள் பொடுகு உண்டாவதற்கான காரணங்களாக இருக்கின்றனர். சில நேரங்களில் அது சாதரணமாக இருந்தாலும் அது கடுமையான பொடுகு அல்லது நாள்பட்ட பொடுகு தொல்லை இருக்கும் போது அது செப்ஹோரிக் டெர்மாடிடிஸ் என்னும் சரும பாதிப்பை ஏற்படுத்தும். இது ஈஸ்ட் மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் வரும். பொடுகுக்கு என்றே சில ஷாம்பு உள்ளது. அதனை மருத்துவர் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம். பல நாட்களுக்கு மேல் பொடுகு தொல்லை குறையவில்லை என்றாலோ அல்லது அதிகரித்து கொண்டு சென்றாலோ மருத்துவரை அணுகி என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ >அரசு போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி?
பொடுகு வவருதற்கான அறிகுறிகள்:
- தலைப்பகுதி முழுவதும் அரிப்பு ஏற்படும், முடி உதிர்வு ஏற்படும்.
- அரிப்பு ஏற்படும் பொது சொரிந்தால் அதனால் புண்ணாகி வீக்கமடையும்.
- தலைபகுதி , நெற்றி, புருவம், மீசை, தாடி, தோள்களின் மேல் செதில்கள் உதிரும் நிலை உண்டாகும்.
மேலும், பொடுகின் தீவிரம் குறையாத நிலையில் முதன்மை மருத்துவர் அல்லது சரும மருத்துவரை அணுகவும், சில மூலிகை எண்ணெய் பொடுகை கட்டுபடுத்தும் தன்மை கொண்டவை அதையும் மருவத்துவரின் ஆலோசனை பெயரில் பயன்படுத்தலாம்.