மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி ரேஷன் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான்..! இனி வீட்டிலிருந்தே ரேஷன் கடையில என்ன பொருள் இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்!

Once again a happy news for you to have a ration card Now you can find out what is available in the ration shop from home read this happy news now

பொதுமக்கள் தங்கள் ஊரில் செயல்படும் ரேஷன் கடைகளின் மூலம் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மிக குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். அரிசி, பருப்பு, கோதுமை போன்ற ரேஷன் பொருட்கள் மக்களுக்கு மாதம் மாதம் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க செல்லும்பொழுது அன்றைய நாளில் ரேஷன் கடைகள் செயல்படுகிறதா? இல்ல இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேலு தெரிவித்துள்ளார்.

ALSO READ >உங்க குடும்பத்துலயும் ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? உடனே படிங்க…! இத செய்லனா உடனே ரேஷன் கார்டை ரத்து பண்றாங்களாம்!

ரேஷன் கடைகள் இயங்குகிறதா? இல்லையா? என்பதை இனி மக்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் அவர்கள் பதிவு செய்யப்பட எண்ணிலிருந்து 9773904050 என்ற எண்ணுக்கு PDS 102 என்று SMS செய்தால் அன்றைய நாள் ரேஷன் கடை திறந்துள்ளதா? அல்லது மூடியுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், 9773904050 என்ற எண்ணுக்கு PDS 101 என்று SMS செய்தால் ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளது என்ற விவரம் கிடைக்கும்.

இந்த புதிய வசதி மூலம் மக்கள் இனி சிரமப்படாமல் வீட்டிலிருந்தே ரேஷன் கடை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN