
நம்முடைய வாழ்கையில் துவண்டு போகும் நேரம் எல்லாம்… யாரோ ஒருவர் நமக்கு ஆறுதலாக இருப்பார்கள். இல்லையெனில், புத்தகங்கள், தன்னம்பிகை வரிகள், உற்சாகமூட்டும் கவிதைகள் என ஏதாவது ஓன்று நம்முடைய வாழ்க்கையில் தேவையாக உள்ளது. ஒரு வரி தத்துவங்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். படித்து பயன்பெறுங்கள்…
One Line Quotes In Tamil

தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்ப்பதில் தவறில்லை

நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்

எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது

அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்

பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும்

நீ என்ன செய்தாலும் குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பான்

ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்

போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்

நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு நாள் விலை மதிப்பற்றது

சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்

அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்

வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ

துனியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்

இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன

ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது

அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை

இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குப் புரிவதில்லை

வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு

யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்

நேசிக்க யாருமில்லாத போது தான், யோசிக்க வைக்கிறது வாழ்க்கை

நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்

எதையும் விட்டு விடாதே… கற்றுக்கொள்

நோயும், கடனும், எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது

எதிர்ப்பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக இருக்காது

வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பைகேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம்கற்றுக்கொண்டால்

துன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே

உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை

தலைகுனிந்து என்னைப் பார், தலைநிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன் – புத்தகம்

சிந்தனை செய், கோபப்படாதே