மத்திய அரசு வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக கடந்த மாதம் மத்திய அரசு 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்திருந்தது. கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருபதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, மத்திய அரசு கொள்முதல் செய்வதிலிருந்து முக்கிய சந்தைகளுக்கு மட்டும் அனுப்படுகிறது. இந்நிலையில், நுகர்வோர் விவகாரத் துறை வெங்காயத்தின் சில்லறை விலை கடந்த 10 நாட்களாக அதிகரித்து அதிகபட்சமாக கிலோ 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
ALSO READ > மின் வாரியத்தின் புதிய அறிவிப்பு!
அதேபோல், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முக்கிய 10 நகரங்களில் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில் இன்று மதியம் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தொடங்க இருக்கிறது. இன்று தலைநகர் டெல்லியில் நுகர்வோருக்கும் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.