பருவமழை தொடக்கம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்

Onset of Monsoon Minister explains precautionary measures-Rain Update Details

தமிழகத்தில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், நவம்பர் 1 ஆம் தேதி (இன்று) உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றும் இவற்றில் கோவையில் மட்டும், நூறு வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கோவையில் திமுக ஆட்சியில் சாலை பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் சிறப்பு நிதியாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.26 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here