ஆரஞ்சு அலர்ட் : தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கொட்டபோகும் கனமழை!

Orange alert has been issued due to heavy rains in Tamil Nadu for the next two days

வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலானது சென்னையை ஒரு புரட்டு புரட்டி எடுத்தது. மிக்ஜம் புயலானது தீவியாமடைந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கியதால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களும் வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேற சென்றனர். தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது தேங்கிய மழைநீர் வற்றி வருவதால் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

ALSO READ : குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் தமிழக அரசின் ரூ.6 ஆயிரம் நிவாரணம் கொடுக்க போறாங்களா..? சற்றுமுன் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில், மிக்ஜம் புயலில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை(டிசம்பர் 16) மற்றும் நாளை மறுநாள்(டிசம்பர் 17) ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் 10 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இதன் காரணமாக அடித்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top