ஆஸ்கார் விருது 2023 தேர்வுப்பட்டியலில் உள்ள 4 இந்திய திரைப்படங்கள்!

Oscar nominations 2023 4 Indian films running for noms in Academy Awards
Oscar nominations 2023 4 Indian films running for noms in Academy Awards

Oscar nominations 2023: உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் 2023-ஆம் ஆண்டுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் கலிபோர்னியா நகரில் இந்திய நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. 95வது ஆண்டாக நடக்கவுள்ள ஆஸ்கர் விருதுகள் வழங்குதலின் இறுதி கட்ட தேர்வு பட்டியல் தயாரித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2023 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படங்கள்:

அகாடமியின் உறுப்பினர்கள் இந்த ஆண்டு சிறந்த திரைப்படப் பரிசுகளுக்கான ஓட்டத்தில் யார் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே வாக்களித்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு 4 படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இந்திய படங்கள் எவை எவை என்பதை காண்போம், நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்காக “செல்லோ ஷோ“, சிறந்த ஆவணப்படத்திற்கு “ஆல் தட் ப்ரீத்ஸ்“, சிறந்த ஆவண குறும்படத்திற்கு கார்த்திகி கோன்சால்வ்ஸின் “தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” மற்றும் “நாட்டு நாடு” — பீரியட் ஆக்ஷன் பிளாக்பஸ்டர் “ஆர்ஆர்ஆர்” இன் பாடல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் ஆஸ்கர் இறுதி நாமினேஷனில் குறைந்தபட்சம் 6 பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் சதுக்கத்தில் இருந்து ஆஸ்கர் இறுதி நாமினேஷன் அறிவிக்கப்படவுள்ளது.

RECENT POSTS IN JOBATAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here