தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பத்ம பூஷன் விருது!

Padma Bhushan Award to Tamil Nadu-Padma Phushan Award To Sundar Pichai

இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட மூன்று விருதுகள் இடம்பெரும். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டன. இந்த விருதை தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்குதான் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை காரக்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது உலகின் பெரும் வர்த்தக நிலையில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அவரது வளர்ச்சியை பாராட்டும் வகையில், சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என கடந்த குடியரசு தினத்தின் போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் எனும் விருதை, அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சத்து சான் பிரான்சிஸ்கோவில் வழங்கி கவுரவித்தார். இது குறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில், விருதை தன்னிடம் வழங்கிய இந்திய தூதர் மற்றும் ஜெனரல் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. இந்த மகத்தான கவுரத்திற்காக இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை உருவாக்கிய நாட்டால் இந்த வகையில் கவுரவிக்கப்படுவது நம்ப முடியாத விஷயமாக உள்ளது. மேலும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் நம் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய பங்காக இருக்கும். எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here