தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு சேலத்தில் பார்ட் டைம் ஜாப்ஸ்! கலெக்டர் கார்மேகம் அறிவித்த குட் நியூஸ்! தேர்வில்லாத அரசு வேலை!

சேலம் மாவட்ட செய்திகள் 2022

BREAKING NEWS >>> SALEM COLLECTOR KARMEGAM ANNOUNCED FOR PART TIME JOBS

SALEM COLLECTOR KARMEGAM ANNOUNCED FOR PART TIME JOBS

ALSO READ>>> சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தொகுப்பூதிய தூய்மைப்பணியாளர் ஆண் 3, பெண் 2 பணியிடங்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் மாதம் ரூ.3000 என்ற ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளது.

மேற்கண்ட பகுதிநேர தூய்மைப்பணியாளர் ஆண், பெண் காலிபணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்ச்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் சேலம் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், உரிய விண்ணப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண்.110-ல் பெற்று அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் வருகிற 30ந் தேதிக்குள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், காலதாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீளிக்காது எனவும், மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


TODAY GOVERNMENT JOBS 2022:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button