தமிழக மின் கட்டணம் பற்றிய மின்சார வாரியத்தின் புதிய அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி

Electricity Payment Decision New Update: தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், ஒரு சில மாதங்களாகவே அனைவருக்கும் மின் கட்டணம் என்பது அதிகமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பாக மின் வாரியம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்துபவர்கள் இனி ‘ஆன்லைன்’ மூலமாக செலுத்த வேண்டும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Electricity Payment Decision – TNEB Online Payment Current Bills

People are happy with the new notification on electricity charges Electricity Board Notification-Electricity Payment Decision
Electricity Payment Decision

இதற்கு முன், மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டணம் ரூ. 5,000 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது. ரூ.5,000 ஆயிரத்திற்கும் அதிகமாக மின் கட்டணம் செலுத்துவோர் ‘ஆன்லைன்’ மூலம் செலுத்துவதாக இருந்தது. இந்நிலையில், தற்பொழுது 2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்துவோர் ‘ஆன்லைன்’ மூலம் செலுத்தலாம் என்று மின்சார வரியம் தெரிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை 2 மாதத்திற்கு ஒரு முறை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக, மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மின்சார வாரியம் சார்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மின்துறை அலுவலகங்களில் செலுத்தப்படக்கூடிய அதிகபட்ச கட்டணம் ரூ. 2 ஆயிரமாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here