மக்களே உஷார்..! ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா…

People beware Corona doubled in one week

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் பாதிப்பு நேற்று 4 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அதாவது ஒரே நாளில் 4,435 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று புதிதாக 5,335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 23-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 5,383 ஆக இருந்தது. அதன் பிறகு 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பு நாள் தோறும் உயர்ந்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 25,587 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் , பொது இடங்களில் முககவசம் அணிவது அவசியம் என்றும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN