மக்களே உஷார்…! புயல் எச்சரிக்கை! நாளை முதல் வெளுத்து வாங்கபோகும் கனமழை!

People beware Storm warning Heavy rain will start tomorrow-Rain Information

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. மேலும் இந்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த புயலானது வறண்ட காற்றின் காரணமாக கரையை வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 7 ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் புயல் இந்த வடகிழக்கு பருவமழையால் உருவான புயல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here