மக்களே உஷார்..! அடுத்து இரண்டு நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

0
People beware The next two days will be heavy rain India Meteorological Department information-Heavy Rains In Tamil Nadu

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை தொடக்கத்தால் தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வந்தது. குறிப்பாக தீபாவளி காலங்களில் மழை பெய்தது குறிப்பிட தக்கது. அதன்பிறகு சில நாட்கள் மழை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 2 வது மழைப்பொழிவு தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்]திருந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வருகிற 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here