மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை! இத்தனை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

People beware Thunderstorm in the next 3 hours Warning for so many districts-Rain Information

கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நிலவுவதால் தமிழகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி(இன்று) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், தென் தமிழகம், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 4 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி உருவாகக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தலிலகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here