சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுக்கும் மக்கள்..! போக்குவரத்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

People invading their hometowns A new notification issued by the Department of Transport read immediately and watch

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பின் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கமானது இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், ஜூன் 7 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கோடை விடுமுறையை கொண்டாட வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்ற மக்கள் ஜூன் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தங்களின் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், போக்குவரத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில், மக்களின் சிரமத்தை போக்க ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை சென்னையில் 2,200 அரசு பேருந்துகளுடன் 500 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் பேருந்துகளும் தற்பொழுது போதுமானதாக இருக்காது என்பதால் தென் தமிழக மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பேருந்துகளை பெற்று அதனை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN