மக்களே… இனி தங்கமே வாங்க முடியாது போல..! வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

People It seems like you cant buy gold anymore The price of gold at an all-time high

சமீப காலங்களாகவே மக்களுக்கு தங்க நகைகளின் மீது அதிக ஈர்ப்பு வந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை முன்பு போல் இல்லாமல் மன்படங்கு உயந்துள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 5 ) சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ. 45 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,690-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,700-ஆக இருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN