ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. திருமணம் ஆன புது தம்பதிகள் கூட உடனே ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஏனெனில், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இலவச அரிசி மற்றும் மலிவான விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கூட ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு நல்ல செய்தி..! மிஸ் பண்ணாம உடனே படிச்சிடுங்க…

ரேஷன் கடைகளில் தற்போது புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அவற்றோடு சர்க்கரை, மண்ணெண்ணெய், பாம் ஆயில், பருப்பு ஆகிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நுகர்வோருக்கு மாதம் ஒரு லிட்டர் பாம் ஆயிலை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ALSO READ > நீங்க தொழில் தொடங்கணுமா? உங்களுத்தான் இந்த இலவச பயிற்சி!
மக்கள் அனைவருக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.