தமிழ்நாட்டில அடுத்த 5 நாட்களுக்கு மழை..! வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!!

people Rain in Tamil Nadu for the next 5 days Information from Meteorological Center announced just now read it fast

தமிழகத்தில் சென்னை வானிலை ஆய்வு மையமானது இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பச் சலனத்தினால் மழைக்கு வாய்ப்பிருக்கும் என்று அறிவித்திருக்கின்றது. அதாவது:

மே-25(அதாவது இன்று) முதல் மே-28 வரை உள்ள தேதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானதிலிருந்து மிதமான மழையாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களின் ஒரு சில பகுதிகளில் காணப்படக்கூடும்.

மே-29(திங்கள்) அன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானதிலிருந்து மிதமான மழையாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களின் ஒரு சிலப் பகுதிகளில் காணப்படக்கூடும் என்று அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து மே-26 முதல் மே-28 வரை தமிழகம் மற்றும் கேரள கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து கடலோர மாநிலங்களிலும் அதிகப்படியான சூரவளிக்காற்ரானது வீசப்படக்கூடும் என்பதால் மீனவர்கள் இத் தேதிகளில் எல்லாம் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு இருக்கும். மேலும் வெப்பநிலையின் அளவானது, 39-40 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சமாகவும், 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சத்துடனும் ஒட்டி காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN