மக்களின் கேள்விகளும்… முதலமைச்சரின் சுவாரஸ்ய பதில்களும்..!

Peoples questions and interesting answers of the Chief Minister-To Answer The Questions On CM MK Stalin

‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் மக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உள்ளார். இதில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டனர். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் ஒருசில சுவாரஸ்ய கேள்விகளையும் அதற்கு’ முதல்வர் சொல்லும் பதிலையும் இந்த பதில் பார்க்கலாம்.

கேள்வி 1 : அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?

முதவரின் பதில் : தமிழகம் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதிலும் சிறைக்கைதிகள் படிக்கும் வகையில் அங்கு நூலகம் அமைக்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள். ராமநாதபுரத்தை சேர்ந்த பெரியவர் – 92 வயதான பாலகிருஷ்ணன், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார். தன் வாழ்நாள் எல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். இதைப் பலரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

கேள்வி 2 : ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின் அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது?

முதலமைச்சரின் பதில் : இந்த திட்டத்தினை தொடங்கி வைத்ததில் நான் பெருமை கொள்கிறேன். இந்த திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்கிற மனநிறைவை நான் அடைவதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன் என்று கூறினார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here