பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் ரவா இனிப்பு கொழுக்கட்டை

0

Pillayaar Chaturthi Special Sweet Rava Kozhukattai Recipe: பிள்ளையார் சதுர்த்தி என்றாலே நம் அனைவரின் எண்ணங்களில் தோன்றும் ஒரு உணவுதான் கொழுக்கட்டைகள். எனவே இந்நாளில் பிள்ளையாருக்கு படைக்க பலவிதமான கொழுக்கட்டைகளை செய்வோம். விநாயகர் சதுர்த்தி நாள் அன்று நீங்கள் அட்டகாசமான சுவையில் கொழுக்கட்டை செய்ய நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டிய கொழுக்கட்டை, இந்த ரவா இனிப்பு கொழுக்கட்டை தான், இதை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

Pillayaar Chaturthi Special Sweet Rava Kozhukattai Recipe

Sweet Rava Kozhukattai Recipe
Sweet Rava Kozhukattai Recipe

நீங்கள் ரவா இனிப்பு கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இக்கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது, அதைப் படித்து செய்து சுவைத்து மகிழ்லவும்.

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்

வெல்லம் – 3/4 கப்

தண்ணீர் – 2 கப்

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

vinayakar chaturthi Kozhukattai Recipe

செய்முறை:

முதலில் வெல்லத்தை தூள் ஆக்கி அல்லது துருவி நீரில் போட்டு அடுப்பை பற்றவைத்து அதன் மீது வைத்து பாகு காய்த்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பின் மேல் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வெல்ல பாகுவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து, அதில் துருவிய தேங்காயைப் பூவைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அதில் நெய் சேர்த்து வறுத்த ரவையை கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

Sooji Sweet Kozhukattai Recipe

பின்னர் அந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, 5 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார். இதை நீங்கள் கடவுளக்கு படைத்தது மற்றும் இல்லத்தில் உள்ள அனைவரும் உண்டு மகிழ்ச்சியடையலாம்.

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here