பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி – தேர்வுத்துறை வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி - தேர்வுத்துறை வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்து முடிந்தது. நடந்து முடிந்த அனைத்து தேர்வுகளின் விடைத்தாள்களும் பாதுகாப்பான மையங்களில் போலீஸ் கட்டுபாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வெளியாட்கள் யாரும் செல்லாத அளவிற்கு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பப்ட்டுள்ளது. இந்த விடைத்தாள்களை திருத்தும் பணி வருகிற 10 ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 80 மையங்களில் இந்த விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மாவட்டங்கள் வாரியாக இடம்மாற்றம் செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெறிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 70 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டல் தவறும், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட பிழைகள் ஏற்படாதவாறு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சிய போக்கு வேண்டாம் எனவும் மையங்களில் செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN