பிளஸ் 2 பொதுத்தேர்வு : இந்த பாட வினாக்களிலும் அதிக பிழை..? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Plus 2 General Exam High error in these subject questions too Shocking information released

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு போதுத்தேர்வானது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், கணித பாடத்தில் கேள்விகளில் பிழை இருந்ததால் அந்த கேள்விக்கு பதிலளித்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

அந்த வகையில், தற்பொழுது கணினித் தேர்வுக்கான வினாத்தாள்களிலும் பிழைகள் இருப்பதால் அதற்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கணினி அறிவியல் ஆசிரியர்கள் அரசு தேர்வுத்துறை இயக்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் 17 ஆம் தேதி நடைபெற்ற கணினி அறிவியல் வினாத்தாளில் ஒவ்வொரு தமிழ் மொழி வினாக்களுக்கு கீழேயும் ஆங்கில மொழி இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், இந்த கணினி அறிவியல் தேர்வில் தமிழ்மொழி வினாக்களுக்கும் ஆங்கில மொழி வினாக்களுக்கும் வெவ்வேறு பொருள் இருப்பதாலும் அதிக அளவில் எழுத்து பிழை இருப்பதாலும் மாணவரகள் பெரும் குழப்பமடைந்தனர். இதுகுறித்து அரசு தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.


RECENT POSTS IN JOBSTAMIL.IN