நந்தினிக்கு தங்கப் பேனாவை பரிசளிக்கும் கவிஞர் வைரமுத்து..! வைரல் டுவிட்…

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வானது கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனையடுத்து இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிட்டார். இப்பொதுத் தேர்வில் மொத்தம் 94% பேர்கள் வரை தேர்ச்சியடைந்திருந்தனர்.

Poet Vairamuthu presents a golden pen to Nandini..! Viral tweet... details here read it now

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அவர் தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்களை எடுத்து 600 க்கு 600 என்ற சாதனையை முறியடித்துள்ளார். மாணவி நந்தினிக்கு தொடர்ந்து பல தரப்பினரிடமிருந்தும் வாழ்த்து செய்தியானது குவிந்து வருகின்றது. இவருடைய தந்தை ஒரு தச்சுத் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பிளஸ்-டு பொதுத் தேர்வில் தமிழ் உள்பட அனைத்துப் பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினி க்கு கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுத் தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் , “ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது?. அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என பதிவிட்டிருக்கின்றார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN