பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே இமெயிலில் அப்ளை பண்ணிடுங்க…!

Pondicherry University Recruitment 2024 announced Project Fellow post

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதில் Project Fellow பதவிக்கென 01 பணியிடத்தை ஒதுக்கியுள்ளது. இந்த வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் அதாவது ஈமெயில் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இந்த பொன்னனா வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Project Fellow வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் எம்.எஸ்சி படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பணியாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தகைய பணிக்கு நீங்கள் எந்தவொரு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

Also Read >> தமிழக அரசின் DHS யில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மிஸ் பண்ணிடாதீங்க…!

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு குறித்த எந்த தகவலும் அறிவிப்பில் கொடுக்கவில்லை. இப்பதவிக்கு செலக்ட் செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுக்கப்படும். எனவே பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்த பணியில் சேர விரும்புவோர் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் தங்களது பயோ டேட்டா விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஈமெயில் அட்ரஸ்

[email protected]

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை அறிய Pondicherry University Official Notification என்ற இந்த லின்கை கிளிக் பண்ணவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top