பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் – தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Pongal Gift Package Program - Launched by Chief Minister-The Pongal Gift Launched By CM MK Stalin

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு வழங்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 2 ஆயிரத்து 429 கோடி நிதியை ஒதுக்கியது.

அரிசி, சா்க்கரை ஆகியன ஏற்கெனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று(திங்கள்கிழமை) பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது தொடங்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது வருகிற 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here