தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அந்த திருநாளில் தான் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியான தமிழர்கள் கொண்டாடும் விழாவாக பொங்கல் பண்டிகை உள்ளது. இது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு பெரிதும் உதவும் சூரியனை கடவுளாக எண்ணி வழிபாடு செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை தெய்வம் கதிரவனுக்கும் உழவு தொழிலுக்கும் நன்றி சொல்வதற்காகவே இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக இந்த பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த பண்டிகையின் போது முறைபடி பொங்கல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
கண்ணிற்கு தென்படும் கடவுளான சூரியனுக்கு பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் இட்டு வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு பொங்கல் வைக்கும் பொது அது வீட்டு வாசலில் வைப்பது மிகவும் சிறந்தது. மேலும் வீட்டின் வாசலில் குத்து விளக்கு ஏற்றி ஒரு பலகையின் மேல் அந்த விளக்கை வைக்க வேண்டும். அவற்றிக்கு பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.
வீட்டின் முன் நிறை குத்து விளக்கை வைக்க வேண்டும். குத்து விளக்கின் முன் பெரிய வாழை இலை போட்டு அதன் வலது பக்கத்தின் ஓரத்தில் மாட்டு சாணத்தை எடுத்து பிள்ளையார் வடிவில் செய்து வைக்க வேண்டும். அதன்பின் செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகில் செய்து வைக்க வேண்டும். மேலும் அதனுடன் வாழை இலையில் பச்சரிசி பருப்புகள் வைக்க வேண்டும். அதன் பிறகு, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை இலையில் வைத்து படைக்கவேண்டும். மேலும் ஒற்றை கரும்பு வைக்க கூடாது என்பதால் இரண்டு கரும்புகளை ஓலை நீக்காமல் சுவற்றில் சாய்த்து வைக்க வேண்டும். மேலும் பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து ரெடி செய்த காப்பரிசியை ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். பின் பொங்கலுக்காக வைத்த பச்சரிசியை களைந்து கொள்ள வேண்டும். பச்சரிசி களைந்த நீரை தனியாக வைத்து கொள்ள வேண்டும். பொங்கல் பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வைக்க வேண்டும். தேங்காயை உடைத்து கொள்ளவும். தேங்காய் உடைத்த தண்ணீரை அந்த பானையில் விட வேண்டும். அடுப்பு எறிவதற்காக மண்ணெண்ணெய் உபயோகம் செய்வதை தவிர்க்க வேண்டும். கிராம புறங்களில் அடுப்பு ஏறிய விட பயன்படுத்தும் ஓலை கொண்டு ஏறிய விடவும்.
பொங்கல் செய்ய களைந்து வைத்த தண்ணீரை பானையில் ஊற்ற வேண்டும். நீங்கள் விரும்பும் பட்சத்தில் பால் சேர்த்து கொள்ளலாம். மேலும் தண்ணீர் கொதித்து பால் பொங்கும் பொது குலவையிட வேண்டும். குலவையிட தெரியாது என்பவர்கள் பொங்கலோ பொங்கல் என்று சொல்ல வேண்டும். பானையில் உள்ள சூடான நீரை பொங்கல் செய்வதற்கு மட்டும் வைத்து விட்டு மீதியை முகந்து விட வேண்டும். பின்னர் அதில் பச்சரிசியை போட வேண்டும். பொங்கல் தயாராகும் பட்சத்தில் அடுப்பின் சூட்டை குறைக்க வேண்டும். இல்லை எனில் அடியில் சாதம் அடிபிடித்து கொள்ளும். பொங்கல் தயாரான பிறகு அதே அடுப்பில் சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும். வாழை இலையின் முன்பு பானையை இறக்கி வைக்க வேண்டும். பொங்கல் பானையை இறக்கி வைத்த பின்னர் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் மந்திரம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகனை சொல்லலாம். அல்லது சூரியனுக்கு உகந்த தமிழ் பாடல்களை படிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். அதில் பொங்கல் பழம் முதலியவற்றை ஒரு வாழை இலையில் வைக்க வேண்டும். பின் மதிய உணவின்போது சர்க்கரை பொங்கல், காய்கறி வகைகளை ஒரு இலையில் வைத்து முன்னோர்களை வணங்கியபின் பின்னரே குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு பொங்கல் வைப்பதற்கு என்று ஒரு வரையறை உள்ளது.
பொங்கல் திருநாளன்று உண்ணும் சர்க்கரை பொங்கல் போல நம் வாழ்வும் இனிமையாகவும் நலமுடனும் இருக்க வேண்டும்.
தமிழர் திருநாள் தை பொங்கல் வழிபாடு முறை | பொங்கல் வைக்க நல்ல நேரம் & வழிபடும் முறை | தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் | பொங்கல் திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது? | உழவர் திருநாள் என்றால் என்ன? | தை முதல் நாள் எவ்வாறு கொண்டாடப்படுகிறது? | போகி திருவிழா என்றால் என்ன?