பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் இன்று காலமானார்..!

பிரபலமான நகைசுவை நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரன் உடல் நல குறைவால் இன்று காலமானார். நடிகர் வடிவேலுக்கு மூன்று தம்பிகள் இரண்டு தங்கைகள் இருகின்றனர். அவர் தனது உடன்பிறந்தவர்களை நன்கு பார்த்துக்கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தவர் என்று வடிவேலுவின் இளைய சகோதரன் ஜெகதீஸ்வரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

Popular comedian Vadivelu brother passed away today read it now

ஜெகதீஸ்வரன் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அவர் காதல் அழிவதில்லை போன்ற 3 படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு சிறு சிறு பிரச்சனையின் காரணமாக அவர் நடிக்க தொடர வில்லை என்று தெரிவித்திருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே கல்லீரல் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், மதுரையில் உள்ள ஐரவாதநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இன்று காலை காலமானார். இவருக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Also Read : தமிழகத்தில் அரிசியின் விலை பலமடங்கு உயர வாய்ப்பு..! என்ன காரணம்?