அரையாண்டுத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு – மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு

Postponement of half-yearly examination again District administration action announcement

வங்ககடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகளில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களும் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளபெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.

ALSO READ : தமிழகத்தில் இன்று கேஸ் சிலிண்டரின் விலை அதிரடி குறைவு..!

இதனையடுத்து, தென்மாவட்டங்களில் மழை ஓய்ந்ததால் வெள்ளநீர் வற்றி வருகிறது. இருப்பினும் சில இடங்களில் 5ஆவது நாளாக இன்றும் மழைநீா் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிகளுக்கு வருகிற ஜனவரி 1 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுல்ள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அரையாண்டு தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top