டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!!

Powerful earthquake in Delhi People ran away from their homes in fear
Powerful earthquake in Delhi People ran away from their homes in fear

Powerful earthquake in Delhi: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோளில் 5.8ஆக பதிவாகிய நிலையில் டெல்லி NCR மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருமுறை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

சரியாக இன்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் நிலநடுக்கத்தின் காரணமாக டெல்லியில் பல்வேறு வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது. சரியாக நிலநடுக்கம் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஏற்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி, ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here