கிறிஸ்துமஸ் பண்டிகை : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Prime Minister Modi extended Christmas greetings to the people of the country

உலகம் முழுவதும் இன்று(டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி போன்ற பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், சென்னை சாந்தோம் பேராலயம், தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் போன்ற பல்வேறு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. ஏசு கிறிஸ்து பிறப்பை விவரிக்கும் வகையில், வண்ண மலர்களால் ஆன குடில்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பிராத்தனைகளும் நடைபெற்றது.

ALSO READ : விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலத்தின் தற்போதைய நிலை..? சற்றுமுன் இஸ்ரேல் தலைவர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி, பிரதமர் மோடியும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top