இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்று பாராட்டிய பிரதமர் மோடி..!

கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யுவதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேன்டரானது கடந்த 23 ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கியது.

தென்ஆப்பிரிக்காவில் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருந்த நிலையில் அதன் தலைவர் சோம்நாத் உடன் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டதுடன் தொலைபேசி வழியே பேசி வாழ்த்தும் தெரிவித்து கொண்டார். இந்நிலையில், சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவர் காலை 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைகட்டுப்பாட்டு மையத்தில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prime Minister Modi praised ISRO scientists in person read now

மேலும், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்ப்பு போடப்பட்டுருகின்றனர். மேலும் அவரை காண பொதுமக்கள் மற்றும் கட்சியினர்கள் கூடியிருந்தனர். அப்பொழுது, பிரதமர் மோடி அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசுகையில் உங்களையும், வெற்றி பெற்ற விஞ்ஞானிகளையும் பார்பதற்கு என்னை கட்டு படுத்த முடியவில்லை என்றார். சந்திரயான் 3 விண்கலம் வெற்றியின் போது நான் வெளிநாடு பயணத்தில் இருந்தேன். அதனால் தான் விஞ்ஞானிகளை சந்திக்க முடியவில்லை ஆனால் நான் இப்பொழுது நாடு திரும்பிய உடனே பெங்களூருவுக்கு வருகை தந்திருக்கிறேன் என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் பெங்களூருக்கு வரும்பொழுது முறைப்படி அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என்று தெரிவித்தேன். அதன்பிறகு, இஸ்ரோ சென்ற அவரை சோம்நாத் மற்றும் பிற விஞ்ஞானிகள் அனைவரும் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

Also Read : SBI பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்க எல்லாருக்கும் ஒரு ஹாப்பி நியூஸ் வந்திருக்கு..! மிஸ் பண்ணாம உடனே படிங்க!!

மேலும், அவர் இஸ்ரோ மையத்திலேயே இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க ஒரு மணிநேரம் இருக்கிறார். அந்த ஒரு மணி நேரமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பிறகு, விண்கலம் செயல்பாட்டு பணிகளை பற்றி பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கி கூறினார்.