இன்று நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களிப்பு..!

Prime Minister Narendra Modi will vote in the second phase of the election today-Today Election Voting For Phase 2

குஜராத் மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநகரில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. நடந்து முடிந்த இந்த முதல் கட்ட தேர்தல் மொத்தம் 89 தொகுதிகளில் நடைபெற்ற நிலையில் இதில் 63 சதவீத மக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத்தில் நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக, எதிக்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட உள்ளன.

இந்நிலையில், குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் மொத்தம் 93 தொகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இன்று நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் குஜராத்தில் உள்ள 4.9 கோடி வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனையை படைக்க வேண்டும் என்றும் 18 வயது பூர்த்தி செய்து புதிய வாக்காளர் அட்டை வைத்திருக்கும் இளம் வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் இந்த வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்த வாக்குபதிவு மையங்களில் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குபதிவு எண்ணிக்கை வருகிற 8 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here