நடிகர் பிரித்விராஜ் நடித்த புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு! வைரலாகும் பிரித்விராஜ் – ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்!

Prithviraj new movie poster release Viral Prithviraj - AR Raghuman photos
Viral Prithviraj – AR Raghuman photos

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராரக இருப்பவர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழில் சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரித்விராஜ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்து லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கினார். இந்த பாடம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

ALSO READ : Cinema News Tamil : தளபதி 68 படத்தின் புதிய அப்டேட்! தாய்லாந்து நாட்டில் சண்டைகாட்சி…

இந்நிலையில், தற்பொழுது பிரித்விராஜ் “ஆடு ஜீவிதம்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது பென்யாமின் என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற ஒரு பட்டதாரி இளைஞன் அங்கு ஒட்டகம் மேய்க்கும் கதையே இந்த படமாகும். இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக உள்ளார்.

இயக்குனர் பிளஸ்சி இயக்கி வரும் ஆடு ஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்துள்ளார். இதையடுத்து, தற்பொழுது படக்குழு ஆடு ஜீவிதம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஆடுகளுக்கு நடுவே நீளமான முடி மற்றும் தாடியுடன் பிரித்விராஜ் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்