சற்றுமுன் வெளியான செய்தி..! 3 நாட்களுக்கு இந்த இடத்திற்கு வர பொதுமக்களுக்கு தடையாம்!! ஏன் தெரியுமா?

The news published a while ago Public is prohibited from entering this place for 3 days Do you know why

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வருகிற 9ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர்களின் வருகையையொட்டி முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வனம் மற்றும் சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சி தலைவர் எஸ்.பி அம்ரித் உட்பட அரசு துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஏப்ரல் 9ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் நரேந்தர் மோடி வருகையால் பாதுகாப்பு கருதி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டிகம் மூடப்படும் எனவும், 7 தேதி முதல் 9ம் தேதி வரை வனவிலங்குகளை காண வாகன சவாரியும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN