Home Current Affairs பைக் ஒட்டிய இளைஞருக்கு நூதன தண்டனையா? என்னவாயிருக்கும்?

பைக் ஒட்டிய இளைஞருக்கு நூதன தண்டனையா? என்னவாயிருக்கும்?

0

சென்னை அண்ணா சாலையில் கடந்த மாதம் 8 ஆம் தேதி பைக்கில் சாகசம் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. வீடியோ வெளியான நிலையில் போலீசார் ஆம்பூரை சேர்ந்த ஹாரிஸ், முகமது சைபான் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா அலெக்ஸ் பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பினோய் முன் ஜாமீன் பெற்றார். அப்போது பினோய்-க்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நூதன நிபந்தனை ஒன்றை வழங்கி உள்ளார். அந்த நிபந்தனையில் தேனாம்பேட்டை சிக்னலில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பினோய் அங்குள்ள வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனை மூன்று வாரங்களுக்கு திங்கள்கிழமை காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரையும் மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையும் விழிப்புணர்வு பிரசுரங்களை செய்ய வேண்டும் எனவும் செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை ஐந்து நாட்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் வார்ட் பாயாக தினமும் காலை எட்டு மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதன் விலைவாக பினோய் அந்த சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.


RECENT POST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here