“புஷ்பா -2” படத்தின் புதிய அப்டேட்..! படக்குழு வெளியிட்ட வீடியோ…

Pushpa-2 Movie New Update The video released by the film crew

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது “புஷ்பா” படம். இந்த படம் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. புஷ்பா படம் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “புஷ்பா -2” படம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படக்குழு புஷ்பா படத்தின் 2 பாகம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, “புஷ்பா -2” படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், வருகிற 7 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு “புஷ்பா -2” படத்தின் முழு வீடியோ வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN