மத்திய அரசின் ரயில்வே வேலைகள் பற்றிய முக்கிய அறிவிப்பை ரயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்!

0
Railway Minister Ashwini Vaishnav has released an important announcement about the central government's railway jobs-In Railway Department Employees To Increase Salary

போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறைதான் அந்த வகையில் ரயில்வே துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியன் ரயில்வே துறையில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவில் மட்டும் 13 ஆயிரத்து 169 ரயில்கள் பயணிகளை ஏற்றி செல்வதற்காக மட்டும் இயக்கப்படுகிறது. இதேபோன்று, சரக்குகளை ஏற்றி செல்ல 8 ஆயிரத்து 479 ரயில்கள் இயக்கபப்டுகின்றன.

ரயில்வே துறையில் இப்பணிகளை மேற்கொள்ள 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக இந்த கோரிக்கான முடிவுகள் தள்ளி போன நிலையில், தற்பொழுது அதற்கான முடிவை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக ரயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் ரெயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும்.

ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவலில், ரயில்வே துறையில் 7,8,9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்குரிய பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அவர்கள் குரூப் ஏ பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள் என்றும் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here