
தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் இதுவரை வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்பொழுது வடகிழக்குபருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் தற்பொழுது சற்று குறைந்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக் கடல்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்றும்(நவம்பர் 10) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ALSO READ : இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பு!
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிவகங்கை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.