அடுத்த மாதம் வரை தொடரும் மழை..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Rain will continue till next month Shocking information released by Meteorological Department-Rain Information

வருடந்தோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை தொடங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் பருவமழை தொடக்கம் கடந்த அக்டோபர் மாதம் முதலே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலே தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

இந்நிலையில், கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நிலவுவதால் தமிழகத்தில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக இன்று (திங்கட்கிழமை) நிலவரப்படி, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக 28 ஆம் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here