தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு – மத்தியக்குழு இன்று ஆய்வு

Rainfall and flood damage in southern districts Central committee to study today

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக தென்மாவட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. தொடர்ந்து பெய்த வந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் மின்சாரம் துண்டிக்கப்ட்டதுடன் பேருந்து, ரயில் உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது மழை ஓய்ந்துள்ளதால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் கிராமங்களில் சூழ்ந்த வெள்ள நீரும் குறைய தொடங்கியுள்ளது.

ALSO READ : தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழை – இரண்டாக பிளந்த நெடுஞ்சாலை

இதையடுத்து, தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காரமான ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இன்று மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வுக்கு பின் வெள்ள பாதிப்பு விவரங்களை இந்த குழு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top