நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியான “விடுதலை” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறு கதையை அடிப்படையாக கொண்டு இரு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள் விடுதலை படத்தை பார்த்து ரசித்தது மட்டுமல்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- மத்திய அரசு வேலையில் விருப்பமுள்ளவரா? உங்களுக்காகவே இந்த வாய்ப்பு வந்துள்ளது!
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023