மீண்டும் உயர்த்தப்பட்ட கேஸ் சிலிண்டர்..! அதிர்ச்சியில் மக்கள்!

0
Re-raised gas cylinder People in shock-Gas Cylinder Price Details

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் கேஸ் சிலிண்டரை பலவித வேலைகளுக்காக பயன்படுத்தி வருகிறனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கேஸ் சிலிண்டரின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், அரசு எண்ணெய் நிறுவனங்கள் தற்பொழுது ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், எல்பிஜி சிலிண்டருக்கான தள்ளுபடியை தற்போது ரத்து செய்துள்ளதால், இனிமேல் எல்பிஜி புக்கிங் செய்வதற்கு கூடுதாக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சிலிண்டர்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக புகார்கள் அளித்து வந்த நிலையில், தற்பொழுது அந்த தள்ளுபடியை ரத்து செய்துள்ளது. இதற்குமுன், அரசு எண்ணெய் நிறுவனங்கள் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்த தள்ளுபடியை ரத்து செய்தது. இந்த முக்கிய முடிவானது கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கேஸ் சிலிண்டருக்கான தள்ளுபடியை ரத்து செய்த தகவலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் ஆகிய நிறுவனங்கள் விநியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே, 19 கிலோ, 35 கிலோ, 47.5 கிலோ மற்றும் 425 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் மீதான அனைத்து தள்ளுபடிகளும் ரத்து செய்யப்படுவதாக இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here