நாட்டில் மக்களுடைய இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக வாட்ஸ் அப் செயலியானது காணப்படுகின்றது. தங்களுடைய அனைத்து தகவல்களையும் இந்த வாட்ஸ் அப் என்கின்ற குறுந்தகவல் மூலமாக பரிமாறிக்கொள்கின்றனர். மேலும் அனைத்து விதமான வியாபாரங்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பயன்படுத்தும் இன்றியமையாத ஒன்றாக இந்த போன் செயலியானது காணப்படுகிறது. அதில் குறுந்தகவல்கள் மட்டுமல்லாது ஆடியோ மற்றும் வீடியோ கால் போன்றவைகளின் மூலமும் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும் வசதிகளும் உள்ளன.
அதுமட்டுமல்லாது வாட்ஸ் அப் நிறுவனமும் பல புதிய யுத்திகளை பயனர்களுடைய வசதிக்கேற்ப அதில் புகுத்திக் கொண்டே வருகின்றது. மேலும் சென்ற மாதத்தில் வந்திருந்த அப்டேட்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து இந்த மாதத்திலும் புதிய அப்டேட்டான “சேனல்கள் பட்டியல்” என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இது மெட்டாவுக்குச் சொந்தமான “WhatsApp iOS” -ல் இடம் பெற்றிருக்கும் புதிய அப்டேட் ஆகும்.
இந்த புதிய வசதியானது வாட்ஸ் அப்பில் தகவல்களை பெற விரும்புகிற நபரிடமிருந்து அதனை ஒளிபரப்புவதற்கான ஒரு வசதியாகும். இதன் மூலமாக சேனல்கள் மற்றும் அப்டேட்ஸ் ஆகிய இரண்டுமே காட்டப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் “ஷேரிங் வித் கேப்ஷன்ஸ்” மற்றும் “போல்ஸ்” என்கின்ற இரு கூடுதல் வசதிகளை வாட்ஸ் அப் நிறுவனமானது வழங்கியிருக்கிறது. மேலும் வாட்ஸ் ஆப்பிலும் இன்ஸ்டாகிராம் போலவே உங்கள் அரட்டைகளில் வாக்கெடுப்புகளைத் தேடுதல், கருத்துக்கணிப்பு முடிவுகளை உருவாக்குதல் மற்றும் சிங்கிள்-வோட் வாக்கெடுப்புகளை உருவாக்குதல் உள்ளிட்டவைகளை இந்த வசதிகளின் மூலமாக அளித்து வருகின்றது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023
- Railway Recruitment 2023 | இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்