சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போக தயாரா? மண்டல பூஜைக்காக நடை திறப்பு…

0
Ready to go to Sabarimala Ayyappan Temple Walk opened for Mandal Puja-Sabarimala Temple Can Be Open

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதங்களில் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். இந்த மண்டல பூஜை நாளை தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்படும்.

இந்நிலையில், ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையானது நாளை தொடங்கி அடுத்த மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறும். இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூசைகள் நடத்தபப்டும் என்றும் நாளை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபப்டுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல பெருவழிப்பாதை, சிறு வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று கோவில் தேவஸ்தானத்தில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல பூஜை தொடங்கிய 40-வது நாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி ஐயப்பன் சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்பின், மண்டல பூஜையின் கடைசி நாளான 41-வது நாளில் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபப்ட்டு அபிஷேககமும் நடைபெறும் பின்னர் கோவில் நடை அடைக்கப்படும்.

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் எருமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here