தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்யவதற்காக ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையமாகும்.
இந்நிலையில், TNPSC மூலம் போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடி நியமனம் மூலம் ஒரு சில துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட்டு வருகின்றனர். அந்த அவகையில், தமிழகத்தில் சுற்றுலா அலுவலர் பணிகளுக்கு நேரடி பணி நியமனம் மூலம் மட்டுமே பணியிடங்கள் நிரப்பட்டு வந்தது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றில், TNPSC மூலமாக நேரடியாக நிரப்பப்பட்டு வந்த சுற்றுலாதுறை பணிகளுக்கு தற்பொழுது தகுதி தேர்வு அடிப்படையில் நிரப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, உதவி சுற்றுலா அலுவலர் கிரேட் 2 பதவியில் மொத்தமாக 23 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், ஜூலை மாதத்தில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு செப்டம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ChatGPT பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒரே மாதத்தில் 1 பில்லியன் பயனார்களை ஈர்த்து சாதனை! வெளியான புதிய தகவல்…
- பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
- 12வது படிச்சவங்களா? விமானத்தில் பறந்துக்கிட்டே வேலைபார்க்கலாம்…
- திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த வாகனத்திற்கு அனுமதி கிடையாது!!