வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

Relief materials can be sent to flood affected people free of cost in government buses

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில், தற்பொழுது மழை ஓய்ந்துள்ளதால் மழைநீர் வடிந்து சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்ட அருகில் இருந்த ஆயிரக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : அடுத்த 3 மாதத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு பரிசு பொருட்கள்..! சென்னை மெட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

இதனையடுத்து, தென்மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மழை குறைந்துள்ளதால் வீடுகளுக்குள் சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. தற்போது மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து நிவாரணம் தர விரும்புவர்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top