இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி என்பது எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டே செல்கிறதோ அதே அளவிற்கு மனிதர்களின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகரித்து தான் வருகிறது. நாம் உண்ணும் உணவு முறை பழக்க வழக்கம் என அனைத்தையும் மாற்றியதால் தற்பொழுது சிறிய குழந்தைகளுக்கே உடலில் அதிக பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த ரிஷிபாலன் என்ற மாணவன் அங்கு நடைபெற்று வந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்றான். அப்பொழுது அந்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : வாட்ஸ் அப்பில் இந்த வசதியை எப்படி யூஸ் பண்ணனுன்னு தெரியுமா..? உடனே தெரிஞ்சிகோங்க… கண்டிப்பா யூஸ் ஆகும்!!
இதுகுறித்து தமிழக முல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாணவர் இறந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்துக்கு நான் ஆறுதலையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.