இனி மின் மீட்டர்களில் ஏற்படும் பழுதுகளை தனியார் ஆய்வகம் மூலம் சரிசெய்து கொள்ளலாம்! TNEB அறிவிப்பு!

Repairs in Electricity Meters TNEB: தமிழகத்தில் மின்சாரத் துறை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மீட்டரில் இனி பழுது ஏற்பட்டால் அதனை தனியார் ஆய்வகங்கள் கொண்டு சென்று சரிசெய்து கொள்ளலாம், என மக்களுக்கு தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Repairs in electricity meters can now be repaired by a private laboratory TNEB Notification
Repairs in electricity meters can now be repaired by a private laboratory TNEB Notification

தமிழகத்தில் மின்சாரத் துறையின் கீழ் மின் இணைப்பு பெற்றுள்ள வீடு, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் பழுதான மின் மீட்டர்களை உபயோகப்படுத்தியதன் காரணமாக அதிகமாக மின்சார கட்டணம் வருவதாக மின்சார வாரியத்திற்கு அதிக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அதிக மின் அழுத்தத்தால் மின் மீட்டர் எரிவது போன்ற பிரச்னைகள் நடக்கின்றது.

ஆனால் பல கோடி மின் இணைப்புகள் உள்ள தமிழகத்தில் மின்வாரிய பரிசோதனை கூடத்தில் மட்டுமே குறிப்பிட்ட கால கெடுவிற்குள் மின் மீட்டர்களை பரிசோதனை செய்து, அந்தந்த கோட்டத்துக்கு அனுப்பி வைப்பது சாத்தியமாகவில்லை. காரணம், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மின் மீட்டர்கள் பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இது குறித்து கடந்த 2 ஆம் தேதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் பல தனியார் ஆய்வகங்களில் மின் மீட்டரை கொடுத்து பழுது சரிசெய்து கொள்ளலாம் என அறிவுறுத்தி, அவை எங்கே இருக்கிறது, அதில் எந்தெந்த ஆய்வகத்திற்கு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் மின்மீட்டர் தொடர்பான பிரச்னைகளை குறிப்பாக அதிகளவு மின்கட்டணம் வருவது, மின்மீட்டர் வேகமாக ஓடுவது, ஓடாமல் பழுதடைந்து நிற்பது மற்றும் உயர் அழுத்த மின்சாரத்தால் எரிந்து போவது போன்றவற்றால் பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

பொதுமக்கள் தங்களது தேவைகளின் அடிப்படையில் தனியார் ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரை கொண்டு சென்று ஆய்வு செய்து, பழுது நீக்கிக் கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கான செலவீனங்களை பொதுமக்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here